close
Choose your channels

திருப்பதி கோவிலில் ரஜினிகாந்த் மகள்கள்: வைரல் வீடியோ!

Thursday, September 23, 2021 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகியோர் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த வீடியோ சற்றுமுன் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-லதா தம்பதிக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகிய இரண்டு மகன்கள் உண்டு என்பதும் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பதும், சௌந்தர்யா நடிகரும் தொழிலதிபருமான விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, அவரது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோர் திருப்பதி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர். தரிசனம் முடிந்து திருப்பதி கோவிலில் இருந்து வெளியே வந்த ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர்களின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ’அண்ணாத்த’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இதனை அடுத்து அவர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz