close
Choose your channels
Don
Nenjukku Needhi

ஆன்மீக டூர் போன ரஜினிகாந்த் மகள்: வைரல் புகைப்படம்

Tuesday, December 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஆன்மீக டூர் போன புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் சமீபத்தில் ஆன்மீக டூர் சென்றுள்ளார். அவர் திருப்பதி, திருச்சானூர், திருத்தணி ஆகிய கோயில்களுக்கு சென்று உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

முதலில் திருப்பதிக்கு சென்ற ஐஸ்வர்யா தனுஷிற்கு கோவில் நிர்வாகிகள் பிரசாதங்கள் அளித்ததாகவும் இது குறித்த புகைப்படங்கள் இன்று காலை வைரலானது என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் திருப்பதியை அடுத்து திருச்சானூர் மற்றும் திருத்தணி ஆகிய கோவில்களுக்கும் ஐஸ்வர்யா தனுஷ் சென்றதாகவும் இன்றைய செவ்வாய்க்கிழமை மனநிம்மதியுடன் இருந்ததாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் திருப்பதி மற்றும் திருத்தணியில் சாமி கும்பிட்டவாறு உள்ள புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.