கிரிக்கெட் மைதானத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ரஜினி-கமல்
மலேசியாவில் நடைபெற்று வரும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்ள தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியை பார்ப்பதற்காக ரஜினி, கமல் ஆகிய இருவரும் மைதானத்தில் சற்றுமுன்னர் ஹெலிகாப்டரில் வந்திறங்கினர்.
கமல், ரஜினி இருவரும் மைதானத்தில் இறங்கியவுடன் ரசிகர்கள் ஆரவாரத்தோடு கைதட்டி அவர்களை வரவேற்றனர். பின்னர் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் அனைவருக்கும் ரஜினி, கமல் இருவரும் கைகொடுத்து வாழ்த்தினர். இன்னும் சில நிமிடங்களில் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.