close
Choose your channels

ரஜினிகாந்த்-அஜித் சந்திப்பா? பரபரப்பில் தமிழக அரசியல்!

Wednesday, December 11, 2019 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 168’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்பதை ஏற்கனவேயும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’தலைவர் 168’ படத்தின் அறிமுக பாடல் தயாராக இருப்பதாகவும் இந்த பாடலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் டி இமான் கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் இதனை அடுத்து ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த பாடலின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதாகவும், இதற்கான ஏற்பாடுகளில் இயக்குனர் சிறுத்தை சிவா தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

ஏற்கனவே தல அஜித்தின் ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பும் அதே ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது என்பதும், ‘வலிமை’ படத்திற்கான செட்கள் தயாராக இருக்கின்றது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தலைவர் மற்றும் தல சந்திப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியலில் இறங்க உள்ள நிலையில், அஜித்தை அதிமுக உள்பட ஒருசில கட்சிகள் அரசியலுக்கு வர வேண்டிய அழைப்பு விடுத்து வரும் நிலையில், இருவரும் சந்தித்தால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Get Breaking News Alerts From IndiaGlitz