close
Choose your channels

ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடக்கம்: இயக்குனர் யார் தெரியுமா?

Tuesday, January 28, 2020 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் இன்று முதல் புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார்.

டிஸ்கவரி சேனலில் ’மேன் வெர்சஸ் வைல்டு’ என்ற நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து தற்போது இந்த நிகழ்ச்சியில் டிஸ்கவரி சேனலுக்காக ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். பேர் கிரில்ஸ் இயக்கும் இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்த்ரா புலிகள் காப்பகத்தில் இன்று நடைபெற உள்ளது .

இந்த நிகழ்ச்சிக்காக காட்டுப்பகுதியில் ரஜினிகாந்த் இரண்டு நாள் தங்கி இருந்து இந்த ஆவணப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். முன்னதாக அவருக்கு இந்த படப்பிடிப்பிற்கு தகுதிபெற மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த ஆவணப்படம் இன்னும் ஒரு நாட்களில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என்று தெரியவருகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz