close
Choose your channels
enpt
mraja

'பிக்பாஸ் 3' நடிகரின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Friday, December 6, 2019 • தமிழ் Comments

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகரும் இயக்குனருமான சேரனின் அடுத்த திரைப்படம் வெளியாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

சேரன் நடித்த ’ராஜாவுக்கு செக்’ என்ற திரைப்படம் வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது 

இதே தேதியில்தான் ஜீவா நநடிப்பில் ராஜுமுருகன் இயக்கிய ‘ஜிப்ஸி’ என்ற திரைப்படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வரும் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் உள்பட ஒருசில படங்கள் வெளியாகும் நிலையில் அதனை அடுத்த இரண்டு வாரங்கள் கழித்து ’ராஜாவுக்கு செக்’மற்றும் ’ஜிப்ஸி’ ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சேரன், ஸ்ருஷ்டி டாங்கே, சரயு, நந்தனா வர்மா, இர்பான் உள்பட பலர் நடித்த இந்த படத்தை சாய்ராஜ்குமார் என்பவர் இயக்கியுள்ளார். வினோத் இசையில் பிரபு ஒளிப்பதிவில் பிரேம் படத்தொகுப்பில் உருவான இந்த படம் சேரனுக்கு திருப்புமுனையை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Get Breaking News Alerts From IndiaGlitz