close
Choose your channels
Por
Joshwa

'ராஜன் இஸ் பேக்'.. வெற்றிமாறன் அடுத்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர்..!

Wednesday, November 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’வடசென்னை’ என்ற திரைப்படத்தில் ராஜன் என்ற கேரக்டரில் இயக்குனர் அமீர் நடித்திருப்பார் என்பதும் அந்த கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றில் இயக்குனர் அமீர் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’மாய வலை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு ’ராஜன் இஸ் பேக்’ என்ற கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

அமீர், சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் ராம்ஜி ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தின் பாடல்களை சினேகன் எழுதியுள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.