சேலையில் கூட இப்படி கவர்ச்சி காட்ட முடியுமா? ரைசா வில்சன் போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ’சேலையில் கூட இப்படி கவர்ச்சி காட்ட முடியுமா’ என கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட ரைசா வில்சன் 63 நாட்கள் அதில் தாக்கு பிடித்து விளையாடினார் என்பதும் அதன் பிறகு அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பதும் தெரிந்தது.
பிக் பாஸ் போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் உடன் ரைசா வில்சன் நடித்த ’பியார் பிரேமா காதல்’ என்ற படம் ஹிட்டான நிலையில் அதன் பிறகு சில படங்களில் நடித்த ரைசா வில்சன் தற்போது ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒன்றை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் ரைசா வில்சன் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்கள் குறிப்பாக நீச்சல் உடை புகைப்படங்களையும் பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன் அவர் சேலையில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
சேலையில் கூட இப்படி கிளாமர் காட்டலாமா, பசங்களுக்கு இப்படி காட்டினால் தான் பிடிக்கும் என்பது போன்ற பல கமெண்ட்கள் இந்த புகைப்படங்களுக்கு பதிவாகி வரும் நிலையில் ஏராளமான லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments