இளம் நடிகரின் மடியில் உட்கார்ந்து பியானா வாசிக்கும் பிக்பாஸ் தமிழ் நடிகை: காதலா?
இளம் நடிகர் ஒருவரின் மடியில் உட்கார்ந்து பிக்பாஸ் தமிழ் நடிகை ஒருவர் பியானோ வாசிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து இருவரும் காதலிக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் ரைசா வில்சன். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் நெருக்கமாக இருந்தார் என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் இணைந்து ’பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்தனர். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஹரிஷ் கல்யாண் குறித்த பதிவுகளை செய்து வந்த ரைசா, ஒரு கட்டத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் தனக்கு க்ரஷ் இருப்பதாகவும் அவருடன் டேட்டிங் செல்ல விரும்புவதாகவும் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
ஆனால் அதன் பின் சில நாட்கள் கழித்து தனது காதலர் என்று ஒருவரை அறிமுகம் செய்த ரைசா, அவரையே திருமணம் செய்ய போவதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது ஹரிஷ் கல்யாண் மடியில் உட்கார்ந்து பியானோ வாசிக்கும் புகைப்படம் ஒன்றை ரைசா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். ஆனால் இந்த புகைப்படம் எடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் ’பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பிற்காக இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும் கூறினார். ஆனால் அதே நேரத்தில் 2020 ஆம் ஆண்டை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அதனால் இந்த புகைப்படத்திற்கு ஒரு வயதுதான் என்று கூறியுள்ளார்
இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்டுகளை அளித்து வருகின்றனர். இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதால் நீங்கள் இருவருமே திருமணம் செய்து கொள்ளலாம் என்று கமெண்ட்டும் இதில் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது