close
Choose your channels

இட்லி, வடை, சாம்பார் சாதம்: சிறையில் இருக்கும் நடிகை ராகினி திவேதியின் சாப்பாடு!

Monday, September 7, 2020 • தமிழ் Comments

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரபல தமிழ் மற்றும் கன்னட நடிகை ராகினி திவேதிக்கு காலையில் இட்லி வடை, மதியம் சாம்பார் சாதம் அளிக்கப்படுவதாக ஜெயில் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன

கடந்த சில நாட்களாக கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போதைப்பொருள் வழக்கில் நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்த வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் சிவப்பிரகாஷ் முதல் குற்றவாளியாகவும் ராகினி இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு உள்ளனர் என தெரிகிறது

இந்த நிலையில் போலீஸ் காவலில் உள்ள ராகினி திவேதி தனிசிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நான்கு பெண் போலீசார் பாதுகாப்பு அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. காலையில் இட்லி, வடை, சப்பாத்தி, மதியம், இரவில் சாம்பார் சாதம் அவருக்கு உணவாக வழங்கப்படுகிறது. இருப்பினும் அவரது தாயார் வீட்டில் சமைத்து கொண்டு வந்த உணவுகளும் முறைகளும் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் ராகினி திவேதியின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது என்பதும் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது இன்று மாலைக்குள் தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz