close
Choose your channels
Anbirkiniyaal

சமீபத்தில் திருமணமான முன்னணி நடிகையுடன் ராதிகா: வைரல் புகைப்படம்!

Thursday, January 21, 2021 • தமிழ் Comments

சமீபத்தில் திருமணமான முன்னணி நடிகையுடன் ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது

நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அதன் பின்னர் மாலத்தீவுக்கு தேனிலவு சென்று வந்தார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக மீண்டும் படப்பிடிப்பில் காஜல் அகர்வால் கலந்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பின்னரும் அவர் ஒரு சில படங்களில் பணிபுரிய ஒப்பந்தமாகியுள்ளார் என்ற நிலையில் அவர் சமீபத்தில் ஒப்பந்தமான திரைப்படம் ‘கோஸ்ட்’

பிரபுதேவா நடித்த ‘குலேபகாவலி’ என்ற படத்தை இயக்கிய கல்யாண் என்பவர் இயக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கிய நிலையில் இன்றைய படப்பிடிப்பில் காஜல் அகர்வால் மற்றும் ராதிகா சரத்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்த நிலையில் அழகிய புது மணப் பெண்ணான காஜலுடன் இணைந்து பணி புரிவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் ராதிகா பதிவு செய்து காஜலுடன் எடுத்த புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். ராதிகாவின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz