close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

பேரக்குழந்தைகளை அலற வைத்த ராதிகா; வைரலாகும் வீடியோ

Friday, May 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ராதிகா சரத்குமாரின் பேரக்குழந்தைகள் சந்தோசத்தில் அலறிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ராயன், பிரபல கிரிக்கெட் வீரர் அபினவ் என்பவரை திருமணம் செய்திருந்தார் என்பதும், இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பதும் தெரிண்டதே.

இந்த நிலையில் சமீபத்தில் சிங்கப்பூர் சென்ற ராதிகா, அங்கு தனது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அதுகுறித்த புகைப்படங்களையும் பதிவு செய்து இருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து தற்போது சென்னை திரும்பி இருக்கும் ராதிகா தனது பேரக் குழந்தைகளுக்கு ஏராளமான பரிசுப் பொருள்களை வாங்கி குவித்துள்ளார். அந்த பரிசுப் பொருள்களை ஒவ்வொன்றாக அவர் எடுத்து பேரக்குழந்தைகளுக்கு கொடுக்க, அந்த பொருட்களை பார்த்தவுடன் குழந்தைகள் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தில் அலறிய சத்தம் சந்தோஷத்தின் உச்சமாக இருந்தது.

இது குறித்த வீடியோவை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.