இந்தியாவில் முதல்முறையாக சென்னையில்.. சினிமா ரசிகர்களுக்கு செம நியூஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் முதல்முறையாக விமான நிலையத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து விமான பயணிகளுக்கும், சென்னை சினிமா ரசிகர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது
இந்தியாவின் பல பகுதிகளில் திரையரங்க வளாகங்களை நடத்தி வரும் பிவிஆர் சினிமாஸ் இந்தியாவிலேயே முதல் முதலாக சென்னை விமான நிலையத்தில் மல்டிபிளக்ஸ் திரையரங்க வளாகத்தை நேற்று திறந்து உள்ளது. மொத்தம் ஐந்து ஸ்கிரீன்கள் கொண்ட இந்த திரையரங்கு வளாகம் விமான பயணிகளின் பொழுதுபோக்கிற்காகவும் விமான நிலையத்தில் அருகில் உள்ள மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,155 பார்வையாளர்கள் அமரும் திறன் கொண்ட இந்த திரையரங்குகள் 2K RGB+ லேசர் ப்ரொஜெக்டர்கள், அல்ட்ரா-பிரைட் படங்களுக்கான RealD 3D டிஜிட்டல் ஸ்டீரியோஸ்கோபிக் ப்ரொஜெக்ஷன் மற்றும் மேம்பட்ட டால்பி அட்மாஸ் இம்மர் ஹை-டெஃபினிஷன் உள்ளிட்ட அதிநவீன சினிமா தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலைய திரையரங்கு வளாக திறப்பு விழா நேற்று நடைபெற்ற நிலையில் பிவிஆர் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜய் பிஜிலி கூறியதாவது: எங்களின் 14வது வளாகம் தமிழ்நாட்டில் திறக்கப்படுவதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். காலம் மாறிவரும் நிலையில் பொழுதுபோக்கு அம்சங்களும் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தேவைப்படுகிறது. அந்த வகையில் விமான பயணிகளுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். விமான பயணிகள் தங்களுடைய ஓய்வு நேரத்தை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள எங்கள் திரையரங்க வளாகம் உதவும்’ என்று தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments