எங்க குடும்பத்திலேயே 9 ஓட்டு இருக்கு: 5 ஓட்டு பெற்ற வேட்பாளர் கதறி அழுத காட்சி!


Send us your feedback to audioarticles@vaarta.com


எங்கள் குடும்பத்திலேயே ஒன்பது வாக்காளர்கள் இருக்கும்போது எனக்கு வெறும் ஐந்து ஓட்டுக்கள் மட்டுமே விழுந்துள்ளது. எனவே வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு இருப்பதாக வேட்பாளர் ஒருவர் கதறி அழுத காட்சியின் வீடியோ வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் என்ற தொகுதியில் நீட்டு என்ற சுயேட்ச்சை வேட்பாளர் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது அழுதவாறே பேட்டி அளித்தார். இதுவரை எனக்கு ஐந்து ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்துள்ளது. எங்கள் குடும்பத்திலேயே ஒன்பது பேர் ஓட்டு போட்டுள்ளனர் என்று கூறினார். அப்போது செய்தியாளர்கள் உங்கள் குடும்பத்தினர்களே உங்களுக்கு ஓட்டு போடவில்லை என்றால் மக்கள் எப்படி போடுவார்கள்? என்று கேள்வி எழுப்ப அதற்கு அவர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள கோளாறால்தான் தனக்கு குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
ஆனால் உண்மையில் அவருக்கு வாக்கு எண்ணிக்கை முடிவில் 856 வாக்குகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சுய விளம்பரத்திற்காக அவர் ஐந்து ஓட்டுக்கள் மட்டுமே பெற்றதாக அழுது பரபரப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.