மகாலட்சுமி வந்தா கல்ல விட்டு அடிங்க: தயாரிப்பாளர் ரவீந்தரின் வீடியோ வைரல்!


Send us your feedback to audioarticles@vaarta.com


தயாரிப்பாளர் ரவிந்தர் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்த நிலையில் மகாலட்சுமியை பார்த்தால் கல்ல விட்டு அடிங்க என வீடியோ ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல தயாரிப்பாளர் ரவிந்தர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது என்பதும் இதுகுறித்து பல விமர்சனங்கள் வெளியானது என்பது தெரிந்ததே. ஆனால் அந்த விமர்சனங்களை உதாசீனப்படுத்திவிட்டு ரவிந்தர் மற்றும் மகாலக்ஷ்மி தற்போது சந்தோசமாக வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய தயாரிப்பாளர் ரவீந்திரன் எங்கள் திருமண புகைபடங்கள் பெரிய அளவில் ட்ரோல் ஆனதால் தான் நாங்கள் பல பேட்டிகள் கொடுத்தோம் என்றும் இனிமேல் எங்களின் பேட்டி தொல்லை இருக்காது என்றும் நாங்கள் சந்தோசமாக எங்களது வாழ்க்கையை வாழ தொடங்கப் போகிறோம் என்றும் தெரிவித்தார்.
மேலும் எனது மனைவி மிகவும் வெட்கப்படுகிறார் என்றும் கேமராவுக்கு முன்னாடி வர மாட்டேன் என்கிறார் என்றும் கூறி அதன் பிறகு வலுக்கட்டாயமாக அவரை கேமிராவுக்கு வரவழைத்தார். இதனை அடுத்து என்னை என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்து கொள்ளுங்கள் ஆனால் என் கணவரைப் பற்றியும் அவரது குண்டான உடல் பற்றிய தயவு செய்து எந்த விமர்சனம் செய்யாதீர்கள் உங்கள் வீட்டில் ஒரு அண்ணன் ஒரு அக்கா குண்டாக இருந்தால் அவர்கள் விமர்சனம் செய்யப்படும் போது எந்த அளவுக்கு நீங்கள் கஷ்டப்படுவீர்களோ, அந்த அளவுக்கு எனக்கு மனம் வருத்தமாக இருக்கும் என்றும் மகாலட்சுமி கூறினார்.
இதனை அடுத்து மகாலட்சுமியிடம் ரவீந்தர், ‘கேமிரா முன் வர மாட்டேன் என்று நீ கூறினால் யாரும் உன்னை சீரியலில் பார்க்க மாட்டார்கள் என்றும் நானே மகாலட்சுமி வந்தா கல்லை விட்டு அடிங்க என்று சொல்லுவேன் என்றும் காமெடியாக கூறினார். மேலும் என்னையே என் மனைவி மகாலட்சுமி கண்டிசன் போட்டு ’அன்பே வா’ சீரியலை பார்க்க வைத்துவிட்டார் என்றும் தெரிவித்தார்.
மேலும் எங்களுடைய திருமணம் இந்த அளவுக்கு விமர்சனம் செய்யப்படும் அளவுக்கு முக்கியமான திருமணம் இல்லை என்றும் இதை விட முக்கியமான பிரச்சனைகள் நிறைய இருக்கிறது என்றும் அதனை டிரெண்ட் ஆக்குங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.