close
Choose your channels
sisa

பிரபல தயாரிப்பாளர் கேயார் மனைவி காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

Saturday, September 25, 2021 • தமிழ் Comments

பிரபல வினியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குநர் கேயாரின் அவர்களின் மனைவி திருமதி இந்திரா நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சவுத் இந்தியன் பிலிம் சாம்பர் ஆப் காமர்ஸ் ஆகியவற்றில் முன்னாள் தலைவராக பணி புரிந்தவரும், பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தரான கேயாரின் மனைவி திருமதி இந்திரா கேயார் சிறுநீரக கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை 4.45 மணிக்கு அவர் காலமானார். அவரது வயது 67. இவர்களுக்கு ஒரு மகனும் 3 மகள்களும் உள்ளனர்

மறைந்த திருமதி இந்திரா அவர்களின் இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz