close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan

இளசுகளை சொக்க வைக்கும் பிரியங்கா மோகன்: வெள்ளை டீசர்ட்டில் அசத்தல் போட்டோஷூட்!

Tuesday, August 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை பிரியங்கா மோகன் தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த வெள்ளை டீசர்ட்டில் உள்ள போட்டோஷுட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த பிரியங்கா மோகன் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 100 கோடி கிளப்பில் இணைந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த இன்னொரு படமான ‘டான்’ என்ற வெற்றிப்படத்தில் நடித்தார். மேலும் சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்திலும் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ’ஜெயிலர்’ திரைப்படம், ஜெயம் ரவி நடிக்க இருக்கும் அடுத்த படம், தனுஷ் நடிக்க இருக்கும் ’கேப்டன் மில்லர்’ ஆகிய படத்திலும் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மகேஷ்பாபு நடிக்கும் அடுத்த படத்திலும் பிரியங்கா மோகன் தான் நாயகியாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களை வைத்துள்ள பிரியங்கா அவ்வப்போது வெளிநாட்டு சுற்றுப்பயணம் மற்றும் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் வெள்ளை டீ-சர்ட்டில் அவர் பதிவு செய்துள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.