close
Choose your channels
cred

விஜய் நாயகி கணவரின் கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.7.5 கோடியா?

Sunday, June 7, 2020 • தமிழ் Comments

கடந்த 2000ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட பிரியங்கா சோப்ரா, விஜய் நடித்த ’தமிழன்’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டில் பிரபலமாகி, ஹாலிவுட் வரை சென்று தற்போது சர்வதேச ஸ்டார் ஆக மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது நிக் ஜோன்ஸ் தனது கையில் கட்டியிருக்கும் மைக்கடிகாரத்தின் மதிப்பு குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வெள்ளை தங்கம் என்று கூறப்படும் வைரத்தால் ஆன இந்த கடிகாரத்தின் மதிப்பு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7.5 கோடி ஆகும். உலகிலேயே விலையுயர்ந்த கைக்கடிகாரங்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் வெளியான ஹாலிவுட் நடிகர் டுவைன் ராக் நடித்த ஜுமான்ஜி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த நிக் ஜோன்ஸ்க்கு ஹாலிவுட்டில் மேலும் பல வாய்ப்புகள் கிடைத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz