close
Choose your channels

பிரியங்காவின் கணவர் வசி இந்தியர் கிடையாதா? எந்த நாட்டை சேர்ந்தவர்?

Saturday, April 19, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், விஜய் டிவி பிரபலம் பிரியங்காவுக்கும் வசி என்பவருக்கும் திருமணம் நடந்தது என்பதும், இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் வைரல் ஆகியது என்பதையும் பார்த்தோம்.

இதுவரை கிடைத்த தகவலின் படி, பிரியங்காவின் கணவர் சீரியல் தயாரிப்பாளர் மற்றும் ஈவண்ட் மேனேஜ்மென்ட் நடத்தி வருபவர் என்று தான் கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின் படி, அவர் இந்தியர் கிடையாது என்றும், இலங்கை தமிழர் என்றும், இலங்கையில் உள்ள திரிகோணமலையில் தான் அவரது குடும்பம் இருப்பதாகவும் கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் இலங்கை நாடாளுமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தரின் தங்கை மகன் தான் வசி என்றும், இலங்கையில் கூட அவர் ஈவண்ட் மேனேஜ்மென்ட் நிகழ்ச்சி கம்பெனி நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் இருந்து சின்னத்திரை நட்சத்திரங்களை இலங்கைக்கு அழைத்துச் சென்று, கலை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் போது தான் பிரியங்கா - வசி இடையே நட்பு ஏற்பட்டதாகவும், அந்த நட்பு தான் நாளடைவில் காதல் ஆகி தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment