close
Choose your channels

முடிவுக்கு வந்தது ப்ரியா பவானிசங்கரின் அடுத்த படம்: விரைவில் ரிலீஸ்!

Tuesday, March 9, 2021 • தமிழ் Comments

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகள் பட்டியலை நோக்கி சென்று கொண்டு இருக்கும் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானிசங்கர். இவர் ’களத்தில் சந்திப்போம்’ ’குருதி ஆட்டம்’ ’ஓ மணப்பெண்ணே’ ’பொம்மை’ ’இந்தியன் 2’ ’பத்து தல’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்

மேலும் அசோக் செல்வன் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்திலும் ப்ரியா பவானிசங்கர் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை டிரைடன்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர் ரவீந்திரன் தயாரிக்க, சுமந்து ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கி வந்தார். இவர் ஏற்கனவே ’சதுரம்-2’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

அசோக் செல்வன், ப்ரியா பவானிசங்கர் முக்கிய வேடங்களில் நடித்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் இந்த படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் எடுத்த குரூப் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

இந்த நிலையில் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததை அடுத்து விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து இந்த படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நாசர், முனிஸ்காந்த், ரவி மரியா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும், இந்த படத்திற்கு போபோ என்பவர் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz