close
Choose your channels
Por
Joshwa

ப்ரியா அட்லியின் கர்ப்பிணி போட்டோஷூட்.. இணையத்தில் வைரல்!

Wednesday, January 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா அட்லி தற்போது கர்ப்பமாக உள்ளார் என்பதும் சமீபத்தில் அவரது வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது என்பது தெரிந்தது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தளபதி விஜய் உள்பட பல பிரபலங்கள் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கர்ப்பிணியாக இருக்கும் போது போட்டோஷூட் எடுக்கும் வழக்கம் கடந்த சில ஆண்டுகளாக வைரல் ஆகி வரும் நிலையில் பிரியா அட்லியின் கர்ப்பிணி போட்டோஷூட் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இயக்கத்தில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகி வரும் ’ஜவான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.