close
Choose your channels
siren
lal_salaam

நேற்று கொல்கத்தாவை துவம்சம் செய்த பிரித்விஷாவின் காதலியா இந்த நடிகை?

Friday, April 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா துவம்சம் செய்தார் என்று தெரிந்ததே. குறிப்பாக ஆட்டத்தின் முதல் ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்து கொல்கத்தா அணியினர்களை அதிரவைத்தார். மேலும் நேற்று அதிரடியாக 41 பந்துகளில் 82 ரன்கள் அடித்தார் என்பதும் அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து டெல்லி அணி நேற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பதும் பிரித்வி ஷாவுக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரித்வி ஷாவின் கேர்ள் ஃபிரண்ட் என்று கூறப்படும் பிரபல நடிகை பிராய்ச்சி சிங் நேற்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிரித்வி ஷாவின் இரண்டு புகைப்படங்களை பதிவு செய்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்த ஒரு புகைப்படத்தில் அவர் ஆட்டநாயகன் விருது வாங்கியபோது பேசுவதை பதிவுசெய்துள்ளார். அதில் ’உங்களால் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார் இன்னொரு பதிவில் ’கூடிய விரைவில் இன்னொரு புதிய சூட்கேஸ் உங்களுக்கு தேவைப்படும்’ என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

நடிகை பிராய்ச்சி சிங் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் காதலிப்பதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருந்தாலும் இருவரும் இந்த தகவலை உறுதி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.