ஒருவழியாக திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரேம்ஜி.. மணமகள் யார் தெரியுமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜிக்கு 45 வயது ஆகும் நிலையில் அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக பெண் பார்த்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவருக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் திருமண பத்திரிகை குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிரேம்ஜிக்கு மனைவியாக வரப்போகிறவர் பெயர் இந்து என்றும் அவர் சேலத்தை சேர்ந்தவர் என்றும் திருமண பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிரேம்ஜி - இந்து திருமணம் ஜூன் 9ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறும் என்றும் திருமண விழாவில் அனைவரும் வருகை தர வேண்டும் என்றும் அந்த திருமண பத்திரிகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து 45 ஆண்டுகளாக பேச்சிலராக இருந்த பிரேம்ஜி தற்போது இல்லற வாழ்வில் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திருமண அழைப்பிதழ் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments