close
Choose your channels
DJ
DJ

யுவன் செய்த காரியம்.. வருத்தத்தில் வெங்கட்பிரபு!

Wednesday, November 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா செய்த காரியத்தால் இயக்குனர் வெங்கட் பிரபு வருத்தத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் வெங்கட்பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி காமெடி மற்றும் குணசித்திர நடிகர் மட்டுமின்றி இசையமைப்பாளரும் கூட என்பது அனைவரும் அறிந்ததே. அவர் இசையமைத்த ஒரு சில திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த நிலையில் நடிகர் பிரேம்ஜி தனது இசை குரு யுவன்சங்கர் ராஜா தான் என ஏற்கனவே பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிரேம்ஜியை பாராட்டி அவருக்கு புதிய ஐபோன் ஒன்றை யுவன்ஷங்கர் ராஜா பரிசாக அளித்துள்ளார்.

இதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள பிரேம்ஜி ’எனது இசை குரு எனக்கு அளித்த புதிய ஐபோனுக்கு மிகவும் நன்றி என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தில் வெங்கட்பிரபு மிகவும் வருத்தத்துடன் அருகில் இருப்பது போன்ற காட்சி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.