close
Choose your channels
sisa

ஹரி-அருண்விஜய் படத்திலிருந்து விலகிய பிரகாஷ்ராஜ்....! அந்த ரோலுக்கு பிரபல இயக்குனர்....?

Friday, August 27, 2021 • தமிழ் Comments

நடிகர் அருண்விஜயும், இயக்குனர் ஹரியும் முதன் முறையாக இணைந்துள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த மார்ச் -ல் துவங்கியது. இப்படத்தில் யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழக அரசு மீண்டும் படப்பிடிப்பிற்கு அனுமதியளித்துள்ளது. இதனால் கடந்த ஜூலை முதல் ஹரி படக்குழு, ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி போன்ற இடங்களில் காட்சிகளை அமைத்து வந்தனர்.

இதில் அருண் விஜய்-க்கு அண்ணனாக நடிக்க, நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களை ஒப்பந்தம் செய்திருந்தனர். இந்த நிலையில் அவருக்கு அண்மையில் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், படத்திலிருந்து விலகியுள்ளார். இந்த காரணத்தால் அவரின் கதாபாத்திரத்திற்கு நடிகர், இயக்குனர் சமுத்திரக்கனியை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இதுகுறித்த செய்திகள் காலை முதல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz