close
Choose your channels

கேம் ஓவர்.. ரஜினியின் மாஸ் வசனத்துடன் பிரதீப் பதிவு.. செம்ம பதிலடி..!

Saturday, November 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிரதீப் விவகாரம் தான் கடந்த ஒரு வாரமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற குற்றச்சாட்டை மாயா குறிப்பினர் சுமத்தி அவரை பலிகடா ஆக்கியது என்பதும், அதற்கு கமல்ஹாசனும் தெரிந்தோ தெரியாமலும் காரணமாக இருந்தது பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் பிரதிப்பை மீண்டும் நிகழ்ச்சிக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டதாக கூறப்படும் நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில் ’தப்பு செய்தவர் அதற்குரிய தண்டனையை பெற்றே ஆக வேண்டும், இது உலக நியதி என கமல்ஹாசன் கூறியதில் இருந்து பிரதீப் மீண்டும் வர வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது. பிரதீப் தப்பு செய்தவர் என்பதை கமல் உறுதியாக நம்பும் நிலையில் இதற்கு மேல் பிரதீப் வருவார் என்ற நம்பிக்கை பார்வையாளர்களுக்கு இல்லை.

இந்த நிலையில் பிரதீப் தனது சமூக வலைதளத்தில் ’கேம் ஓவர்’ என்று பதிவு செய்து ’ஒரு கருப்பு ராஜாவை 10 வெள்ளை காய்கள் சேர்ந்து வீழ்த்தியது போன்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதில் இருந்து அவரது ரீஎண்ட்ரி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ’ரெண்டு கை ரெண்டு கால் இல்லைன்னா கூட காளி என்றவன் பொழைச்சுக்குவான் சார், கெட்ட பையன் சார் இவன், என்று ரஜினியின் ‘முள்ளும் மலரும்’ வசனத்தையும் பதிவு செய்துள்ளார். மேலும் ’வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை வழங்கி விட்டேன், நல்லா இருங்க’ என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.