close
Choose your channels

ரெட் கார்டையே கொண்டாட்டமாக மாற்றிய பிரதீப்.. வைரல் புகைப்படங்கள்..!

Monday, November 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரெட்கார்ட் கொடுத்து அனுப்பப்பட்டது, சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. பிரதீப்புக்கு அநியாயம் இழைக்கப்பட்டது என கிட்டத்தட்ட அனைத்து பார்வையாளர்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதீப் தனது சமூக வலைத்தளத்தில் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவருடைய குடும்ப பெண்கள் அனைவரும் ரெட்கார்டை காண்பித்தபடி பிரதீப் உடன் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சியும் உள்ளது.

இதனை அடுத்து ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப், அதே ரெட் கார்டை வைத்து குடும்பத்தினருடன் கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்து தன்னை வெளியேற்றியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் என கமெண்ட் பதிவாகி வருகின்றன.

மொத்தத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால் கூட பிரதீப்புக்கு இந்த அளவு மக்களின் ஆதரவு கிடைத்திருக்குமோ என்னமோ, ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்டதை அடுத்து அவருக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. தாங்கள் செய்த தவறை திருத்தி கொண்டு, பிரதீப்பை மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக அனுப்ப வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.