close
Choose your channels
Por
Joshwa

'பால் மேட்டர்': பிரதீப் சொன்னது இதுதான்.. பூர்ணிமாவுக்கு ஒரு குறும்படம்..!

Monday, November 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக பால் மேட்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பூர்ணிமாவிடம் அது குறித்து பிரதீப் விளக்கம் அளித்தார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரதீப் குறித்து குற்றச்சாட்டு கூறிய ரவீனா, ‘நான் ஏன் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தேன் என்றால், பால் டாஸ்க் நடந்தது பூர்ணிமா குனிவதை பார்த்து, நீ குனியாதே, அவன் எந்த பாலை அடிக்கிறதுன்னு கன்ஃப்யூஸ் ஆயிடுவான்’ என்று சொன்னதாக கூறினார்.

இந்த நிலையில் பால் மேட்டரில் உண்மையில் என்ன நடந்தது என பிரதீப் இடம் பூர்ணிமா கேட்டபோது பிரதீப் அதற்கு விளக்கம் அளித்தார். விஷ்ணு மற்றும் மணிசந்திரா ஆகிய இருவரும் பால் டாஸ்க் விளையாடும் போது, விஷ்ணு தனது கால்களுக்கு இடையே பாலை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அதை அடிக்க மணி சந்திரா முயற்சி செய்தபோது, மணி வேற ஏதாவது பாலை அடிச்சிர போறான் என்று கூறியதாகவும், உன்னை பத்தி எதுவும் பேசவில்லை என்றும், நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்றும் கூறினார். .இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு பிரதீப் மீது எந்தவித தவறும் இல்லை என்று பூர்ணிமாவும் திருப்தி அடைந்தார்.

ஆனால் இந்த மேட்டரை ரவீனா தான் தவறாக புரிந்து கொண்டு பூர்ணிமா உட்பட மற்ற எல்லோரிடமும் பற்றவைத்ததை அடுத்தே, பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டது. இதன் காரணமாகத்தான் அவருக்கு அனைத்து பெண்களும் ஒன்று சேர்ந்து ரெட் கார்டு கொடுத்துள்ளனர்.

மொத்தத்தில் இந்த வீடியோ மூலம் பிரதீப் மீது எந்த விதமான தவறும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.