பிரபுதேவாவின் முதல் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி
Thursday, September 29, 2016 தமிழ் Comments
பிரபல நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவெளிக்கு நடித்த படம் தேவி'. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இயக்குனர் விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் 'தமன்னா முதல்முறையாக பிரபுதேவாவுக்கு ஜோடி சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் ஒரு கட் கூட செய்யாமல் படத்தை முழுமையாக சென்சார் அதிகாரிகள் அனுமதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாஜித் வாஜித் இசையமைத்துள்ள இந்த படத்தில் சோனு சூட், சதீஷ், பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபுதேவா தயாரித்துள்ள முதல் படமே யூ' சர்டிபிகேட் பெற்றுள்ளதால் அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது. இந்த படம் வரும் ஆயுதபூஜை தினமான அக்டோபர் 7ஆம் தேதி மூன்று மொழிகளிலும் வெளிவரவுள்ளது.