close
Choose your channels
Raayan

மஞ்சுவாரியரை அழகாக ஆட வைத்த பிரபுதேவா.. 7 மொழிகளில் உருவாகும் படத்தின் பாடல்!

Monday, October 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் உள்பட ஏழு மொழிகளில் உருவாகி வரும் படம் ஒன்றின் பாடலுக்கு மஞ்சு வாரியாரை அழகாக ஆடவைத்து நடன இயக்குனர் பிரபுதேவாவின் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

மஞ்சுவாரியர் முக்கிய கேரக்டரில் நடிக்கும் திரைப்படம் ’ஆயிஷா’. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, அரபு மற்றும் ஆங்கிலம் என மொத்தம் 7 மொழிகளில் தயாராகி வருகிறது.

அமீர் பல்லிக்கல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜெயச்சந்திரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த பாடலை பாடலாசிரியர்கள் ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள்ளனர். அரபு மொழி கலந்து உருவாகும் இந்த பாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பிரபுதேவா பணிபுரிந்தார்.

இந்த பாடலில் நடன இயக்குனர் பிரபுதேவா, மஞ்சுவாரியரை அழகாக ஆட வைத்த காட்சிகளின் வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் இந்த பாடலில் மஞ்சுவாரியருடன் பிலிப்பைன்ஸ், நைஜீரியா, சிரியா, ஏமன் ஆகிய நாட்டைச் சேர்ந்த நடன கலைஞர்கள் நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் லடாக் பகுதியில் படமாக்கப்பட்டது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment