விஜய்யின் 'தளபதி 64' படத்தில் பிரபுதேவா கனெக்சன்
விஜய், விஜய்சேதுபதி முதல்முறையாக இணைந்து நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த செய்திகள் தினந்தோறும் பேஸ்புக் டுவிட்டர் ஆகிய சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்ட் ஆகி வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது பிரபுதேவாவின் சகோதரரும் நடன இயக்குனரும் நடிகருமான நாகேந்திர பிரசாந்த் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே கடந்த 2004ஆம் ஆண்டு விஜய் நடித்த கில்லி படத்தில் நடித்து இருந்தார் என்பதும் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விஜய் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
’தளபதி 64’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற இருப்பதாகவும் அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள விஜய், விஜய்சேதுபதி உள்பட படக்குழுவினர் அனைவரும் இன்னும் ஓரிரு நாளில் கர்நாடகா செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் ‘தளபதி 64’ படத்தில் விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.