close
Choose your channels
NMM

6 ஹீரோயின்களை ஏமாற்றினாரா பிரபுதேவா? அதிர்ச்சி தகவல்

Friday, July 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் நடிகர், நடன இயக்குனர்,இயக்குனர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வரும் பிரபுதேவா, 6 ஹீரோயின்களை ஏமாற்றி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபுதேவா நடித்த ’மை டியர் பூதம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ’பஹிரா’ என்ற படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அம்ரியா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் என ஏழு நாயகிகள் நடிக்கின்றனர். இவர்களில் 6 பேரை காதலித்து ஏமாற்றும் சைக்கோ கேரக்டரில் பிரபுதேவா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் இந்த படத்தின் கதை வித்தியாசமானதாக இருக்கும் என்று கூறப்படுவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் நடித்த ‘த்ரிஷா இல்லைன்ன நயன்தாரா, சிம்பு நடித்த ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள அடுத்த படம் தான் ’பஹிரா’ என்பதும், சைக்கோ கதையம்சம் கொண்ட இந்த படம் பிரபுதேவாவின் இன்னொரு வெற்றிப்பட பட்டியலில் இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.