close
Choose your channels
sisa

சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே, உன்னை சிக்க வச்சு கொல்லுரேண்டி மயிலே: பிரபுதேவாவின் 'பஹிரா' டீசர்

Friday, February 19, 2021 • தமிழ் Comments

பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பஹிரா’ என்ற திரைப்படத்தின் டீசரை சற்றுமுன்னர் நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

த்ரில் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வைரலாகி வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான கெட்டப்புகளில் பிரபுதேவா நடித்திருக்கும் இந்த படத்தில் அம்ரியா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர்

இந்த டீசரில் பிரபுதேவாவின் பல வித்தியாசமான கெட்டப்புகள் மற்றும் அதிர்ச்சியடைய செய்யும் திரில் காட்சிகள் இருப்பதை அடுத்து இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டீசரில் பிரபுதேவா ஒவ்வொரு பெண்களையும் கொல்லும் சைகோ வேடத்தில் நடித்துள்ளார். குறிப்பாக டீசரின் இறுதியில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே, உன்னை சிக்க வச்சு கொல்லுரேண்டி மயிலே’ என்று வசனம் பேசி கொலை செய்யும் காட்சி த்ரில்லாக உள்ளது. கணேசன் சேகர் இசையில் செல்வகுமார் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz