close
Choose your channels
Don
Nenjukku Needhi

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

Thursday, November 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது தற்போது பிரபு ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து இருப்பது தெரியவந்துள்ளது. விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பிரபு தனது கேரக்டருக்கான பகுதியின் டப்பிங் பணியை செய்வது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் பிரபு அவர்களுடன் பணிபுரிவதில் தனக்கு மிகுந்த சந்தோஷம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் பிரபு நடித்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தில் கலா மாஸ்டர், ரெடின் கிங்ஸ்லி, லொள்ளுசபா மாறன், ஸ்ரீசாந்த் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.