close
Choose your channels
Por
Joshwa

மாஸ் காட்சிகள்.. மிரட்டும் மேக்கிங்.. பிரபாஸின் 'சலார்' ட்ரெய்லர்..!

Friday, December 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபாஸ் நடித்த 'சலார்' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் டிரைலர் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள் உள்ள இந்த ட்ரைலரில் மிரட்டும் காட்சிகள், மாஸ் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. கேஜிஎப்’ படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கியிருக்கும் இந்த படத்தை ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பணத்தை தண்ணீராக செலவழித்து ஒவ்வொரு காட்சிகளும் எடுத்து உள்ளார்கள் என்பது டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது.

பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் தொடக்கத்தில் வரும் பில்டப் காட்சிகள் ’கேஜிஎப்’ படத்தை நினைவுபடுத்தும் விதமாக இருந்தாலும் பழங்கால ஆயுதங்கள், பழமையான கோட்டைகள் கவனம் பெரும் வகையில் உள்ளன. மேக்கப்புக்கு ஏகப்பட்ட செலவு செய்திருப்பார்கள் என்பதும் குறிப்பாக உடைகள் மற்றும் அணிகலன்கள் பிரமிக்க வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸின் மாஸ் என்ட்ரி, பிரித்விராஜின் அசத்தலான காட்சிகள், இருவரும் சிறுவயதில் நண்பர்களாக இருக்கும் காட்சிகள், ஆட்சி அதிகாரத்தை பிடிக்க நடக்கும் மோதல்கள், சூழ்ச்சி ஒருபுறம், நட்பு இன்னொரு புறம், துரோகம் ஒருபுறம் என கதை செல்கிறது.

இதற்கிடையில் அம்மா பாசம், ஸ்ருதிஹாசனுடன் காதல் என இந்த படத்தில் அனைத்து அம்சங்களும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ’பாகுபலி’ படத்திற்கு பிறகு ஒரு மிகப்பெரிய வெற்றி கிடைக்காமல் இருந்த பிரபாஸுக்கு இந்த படம் நிச்சயம் உலக அளவில் வெற்றி பெறும் ஒரு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.