பெய்ரூட் மக்களுக்காக ஆபாச நடிகை எடுத்த அதிரடி முடிவு: பரபரப்பு தகவல்
சமீபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வெடித்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த வெடி விபத்தில் சுமார் 200 பேர் பலியானதாகவும் 6000 பேர் பாதிக்கப்பட்டு காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
உலகையே அதிர செய்த இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக நாடுகள் உதவிகளை செய்து வருகின்றன. இந்த நிலையில் பிரபல ஆபாச நடிகை மியா கலிஃபா பெய்ரூட் மக்களுக்கு உதவ முன்வந்துள்ளார். இவர் பெய்ரூட் நகரில் பிறந்தவர் என்பது குறிப்பிடப்பட்டது. எனவே தனது சொந்த ஊர் மக்கள் வெடி விபத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது உதவியை அளிக்க முன்வந்துள்ளார்
இதனை அடுத்து அவர் தனது மூக்கு கண்ணாடியை ஏலம் விடுவதாக அறிவித்துள்ளார். இந்த கண்ணாடியை ஏலம் விடுவதால் கிடைக்கும் தொகையை தன்னுடைய சொந்த ஊரான பெய்ருட் நகர மக்களுக்கு வழங்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்
இதுவரை இந்த கண்ணாடியை வாங்க ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை ஏலம் கேட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் அதிகத் தொகைக்கு ஏலம் போக வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. பெய்ரூட் வெடிவிபத்தில் பாதிப்படைந்த மக்களுக்காக மியா கலிஃபாவின் உதவிக்கு அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்