நீண்ட நாள் காதலருடன் நிச்சயதார்த்தம்: சர்ச்சைக்கு பேர்போன கவர்ச்சி நடிகையால் பரபரப்பு
பிரபல கவர்ச்சி நடிகையும், சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான வீடியோ, புகைப்படங்களை பதிவு செய்து அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருபவருமான பூனம்பாண்டே தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்ய நிச்சயதார்த்த மோதிரம் மாற்றியுள்ளார்.
நடிகை பூனம் பாண்டே கடந்த சில வருடங்களாக சாம் பாம்பே என்பவரை காதலித்து வருகிறார். காதலருடன் கவர்ச்சியாக இருக்கும் பல புகைப்படங்களை பூனம் பாண்டே தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் பூனம் பாண்டே நீண்ட காதலரை திருமணம் செய்யும் வகையில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி முடிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் பூனம் பாண்டேவுக்கு நிச்சயதார்த்த மோதிரம் அணியும் புகைப்படம் ஒன்றை சாம் பாம்பே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ’நிச்சயதார்த்ததை முடித்துவிட்டோம்’ என்று பதிவு செய்துள்ளார். அதற்கு பூனம் பாண்டே, ‘சிறப்பான உணர்வு’ என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பூனம் பாண்டேவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் திருமணம் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.