close
Choose your channels
RaRa

மீண்டும் 'பீஸ்ட்' படப்பிடிப்பில் கலந்து கொள்வது எப்போது? பூஜா ஹெக்டே பேட்டி!

Wednesday, July 28, 2021 • தமிழ் Comments

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்தது. இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட பாடல் காட்சியும் மேலும் ஒரு சில காட்சிகளும் படமாக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை பூஜா ஹெக்டே, ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்யுடன் பாடல் காட்சியில் நடித்து முடித்துவிட்டதாகவும் அவர் ஒரு திறமையான நடிகர் என்றும் தெரிவித்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ் திரைப்படத்தில் நடிப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் அதுவும் விஜய் போன்ற ஒரு நடிகருடன் நடித்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் உடனான பாடல் காட்சி முடிந்த நிலையில் அடுத்த மாதம் மீண்டும் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பிலும் பூஜா ஹெக்டே இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz