செல்போனை விமானத்தில் தொலைத்த பூஜா ஹெக்டே.. உடன் வந்த நடிகரை மன்னித்த தருணம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல நடிகை பூஜா ஹெக்டே விமானத்தில் தன்னுடைய செல்போனை தொலைத்து விட்டு தேடும் வீடியோ பிரபல நடிகரின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழில் ’முகமூடி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே அதன் பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தார். இதனை அடுத்து மீண்டும் விஜய் நடித்த ’பீஸ்ட்’ படம் மூலம் தமிழில் ரீ என்ட்ரி ஆனவர் தற்போது விஜய் நடித்து வரும் ’ஜனநாயகன்’ படத்தின் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் சூர்யா நடித்து வரும் ’ரெட்ரோ’ உட்பட ஒரு சில தமிழ் படங்களிலும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் வருண் தவானுடன் விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது பூஜா ஹெக்டே தனது செல்போனை தொலைத்துவிட்டார். இதனை அடுத்து விமானத்திற்குள் அவர் செல்போனை தேடிய போது எடுத்த வீடியோவை வருண் தவான் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட அதன் பிறகு ஒரு வழியாக செல்போனை கண்டுபிடித்து கொடுத்தார்.
செல்போனை கண்டுபிடித்து தந்ததற்காக உன்னை மன்னித்துக் கொள்கிறேன் என்று பூஜா ஹெக்டே கூறிய காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. மேலும் வருண் தவான் மற்றும் பூஜா ஹெக்டேஆகிய இருவரும் இணைந்து ‘Hain Jawani Toh Ishq Hona Hain’ என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com