அஜித்தின் சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கில் 'பீஸ்ட்' பூஜா ஹெக்டே: ஹீரோ யார் தெரியுமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த பூஜா ஹெக்டே, அஜித் நடித்த ’வீரம்’ படத்தின் ரீமேக்கில் தமன்னா வேடத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’வீரம்’ திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் அஜீத்தின் கேரக்டரில் சல்மான் கான் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே .
இந்த நிலையில் இந்த படத்தில் தமன்னா கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது ‘பீஸ்ட்’ நாயகி பூஜா ஹெக்டே இணைந்து உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. இதனை அடுத்து சல்மான்கானுடன் பூஜா ஹெக்டே நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ’கபி ஈத் கபி தீவாளி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்து உள்ளதாக பூஜா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.