close
Choose your channels
NMM

முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியால் விறுவிறுப்பாகும் 2ஆம் பாகம்: 'PS2' ரிலீஸ் எப்போது?

Wednesday, October 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ஐந்து நாட்களில் 300 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாகவும் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.500 கோடி யாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றி காரணமாக படக்குழுவினர் இரண்டாம் பாகத்தின் பணியை விறுவிறுப்பாக தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது கிராபிக்ஸ் காட்சிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், அதை நோக்கி பணிகளும் நடைபெற்றுக் கொண்டு தெரிகிறது.

முதல் பாகத்தை விட இருமடங்கு இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால் இரண்டாம் பாகத்தின் வசூல் முதல் பாகத்தின் வசூலை முறியடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.