close
Choose your channels
siren
lal_salaam

உலகம் முழுவதும் புரமோஷன்: 'பொன்னியின் செல்வன்' படக்குழுவின் மெகா திட்டம்

Wednesday, September 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ வரும் 30ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்குவதால் புரமோஷன் பணிகளை விறுவிறுப்பாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இன்று தஞ்சை பெரிய கோவிலில் தொடங்கும் புரமோஷன் பணிகள் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் நடைபெறும் என்றும் அதே போல் உலகின் சில நாடுகளிலும் புரமோஷன் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

முதல் கட்டமாக இன்று தஞ்சை பெரிய கோவிலில் நடக்கும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ஹைதராபாத்,பெங்களூர், கொச்சி, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களிலும் பிரமாண்டமாக புரமோஷன் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அதேபோல் துபாய், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் புரமோஷன் பணிகளை செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.