close
Choose your channels
NMM
NMM

'பொன்னியின் செல்வன்' நட்சத்திரங்களுக்கு எவ்வளவு சம்பளம்? அதிக சம்பளம் யாருக்கு தெரியுமா?

Sunday, September 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் வரும் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 500 கோடி என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களுக்கு சம்பளம் எவ்வளவு என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்த நட்சத்திரங்களில் அதிக சம்பளம் விக்ரமுக்கு என்றும் அவருக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் மீண்டும் ரீ எண்ட்ரி ஆகியுள்ள நந்தினி கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு ரூ.10 கோடி சம்பளம் என தெரிகிறது.

மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் ஒன்றான குந்தவை கேரக்டரில் நடித்துள்ள த்ரிஷாவுக்கு ரூ.2 கோடி சம்பளம் என்றும் ராஜராஜசோழன் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவிக்கு ரூ.8 கோடி சம்பளம் என்றும் கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் கதையின் உண்மையான நாயகனான வந்தியத்தேவன் கேரக்டரில் நடித்த நடிகர் கார்த்தி 5 கோடி சம்பளம் பெற்றாதாக கூறப்படுகிறது.

மேலும் சுந்தரசோழன் கேரக்டரில் நடிக்க பிரகாஷ்ராஜுக்கு ஒரு கோடி என்றும் பூங்குழலி கேரக்டரில் நடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு ரூ.1.5 கோடிஎன்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்த சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம் ஆகியோர்களுக்கும் மிகப்பெரிய சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.