close
Choose your channels
siren
lal_salaam

பிக்பாஸ் நிகழ்ச்சி.. கமல் கடும் விளைவுகளை சந்திப்பார்: அரசியல் கட்சி தலைவர் எச்சரிக்கை..!

Monday, November 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகள் இருப்பதாகவும் அதனை உடனே மாற்றி அமைக்க வேண்டும், இல்லாவிட்டால் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் விஜய் டிவி மற்றும் தொகுத்து வழங்கும் கமல் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பிரபல அரசியல் கட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் முடிவடைந்து தற்போது 7வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் சிலர் வரம்பு மீறி வருவதாகவும் முத்தக்காட்சி, படுக்கையறை காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இது குறித்து எச்சரிக்கை விட்டுள்ளார் பொழுதுபோக்குக்காக தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் படுக்கையறை காட்சிகள், ஆபாச காட்சிகள் இருப்பதால், விஜய் டிவி உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். இல்லையேல் கடும் விளைவுகளை இந்த நிகழ்ச்சியை நடத்தும் விஜய் டிவி மற்றும் தொகுத்து வழங்கும் கமலஹாசன் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.