close
Choose your channels

சன்னிலியோன் படிக்கும் கல்லூரியில் கார்ட்டூன் கதாபாத்திரம்: காவல்துறையில் புகார்

Tuesday, September 1, 2020 • தமிழ் Comments

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி பாடப்பிரிவின் தகுதி பட்டியல் சமீபத்தில் வெளியான போது அதில் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பெயரும் இடம்பெற்றிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறும்புக்கார மாணவர் ஒருவர் செய்த வேலையால் தான் சன்னி லியோன் பெயர் இடம் பெற்றது என்பதும் சன்னி லியோன் இதுகுறித்து தனது டுவிட்டரில் காமெடியாக ஒரு ட்வீட்டை பதிவு செய்தார் என்பதும் தெரிந்ததே.

அதேபோல் சன்னி லியோனை அடுத்து பாடகி ஹேமா கக்கர் என்பவரின் பெயரும் இந்த இந்த கல்லூரியின் பட்டியலில் இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில் தற்போது பிரபல கார்ட்டூன் கதாபாத்திரம் சின் சான் பெயரும் அதே கல்லூரியின் தகுதிப் பட்டியலில் இடம் பெற்று உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டுபிடித்த கல்லூரி நிர்வாகம் உடனடியாக அந்த பெயரை அகற்றிவிட்டு புதிய பட்டியலை தயார் செய்து வருகின்றனர்.

தொடர்ச்சியாக தங்கள் கல்லூரியில் இதுபோன்ற தவறான தகவல்களை மர்ம நபர்கள் பதிவு செய்வதாகவும் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் இது மிகவும் தவறான செயல் என்றும் கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கல்லூரியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மர்ம நபர்கள் இதனை செய்து வருவதாகவும் கல்லூரி நிர்வாகத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் கல்லூரி தொடங்குவதற்கு முன் மாணவர்களின் பட்டியல் மீண்டும் ஒருமுறை முழுமையாக சரிபார்க்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz