close
Choose your channels
Rajavamsam

பிளான் பண்ணி பண்ணனும் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பா?

Friday, September 24, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரியோ நடித்த ’பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற திரைப்படம் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, புரமோஷன் பணிகளும் சிறப்பாக நடந்தது என்பது தெரிந்ததே. மேலும் இந்த படத்திற்கான முன்பதிவுகளும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை காட்சியும் மதிய காட்சியும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஒருசில பைனான்ஸ் பிரச்சினை இருப்பதாகவும் அது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில் மாலைக்காட்சி அனேகமாக வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் ஒரு சிலர் ’பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என்றும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தின் பிரச்சனையை சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வந்து படத்தை இன்று மாலையாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz