close
Choose your channels

மிஷ்கினின் அடுத்த படம்: டைட்டில், நாயகி, இசையமைப்பாளர் அறிவிப்பு!

Sunday, September 20, 2020 • தமிழ் Comments

மிஷ்கினின் அடுத்த படம்: டைட்டில், நாயகி, இசையமைப்பாளர் அறிவிப்பு!

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் சிம்பு நடிப்பார், அருண் விஜய் நடிப்பார் என்று ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இதனை அடுத்து செப்டம்பர் 20ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கு தான் இயக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடப்போவதாக மிஷ்கின் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் அவர் கூறியபடி மிகச்சரியாக இன்று அதிகாலை 12 மணிக்கு தனது டுவிட்டரில் தனது அடுத்தப் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் ’பிசாசு 2’. கடந்த 2014 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ’பிசாசு’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஆறு ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது

’பிசாசு 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைக்க இருப்பதாகவும், இந்தப் படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் ’பிசாசு 2’படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

Get Breaking News Alerts From IndiaGlitz