close
Choose your channels

மல்லாக்க கிடந்த காரை உற்சாகத்தோடு மீட்ட பொதுமக்கள்… இணையத்தை கலக்கிய வீடியோ!

Monday, June 21, 2021 • தமிழ் Comments

மும்பை சாலையில் குப்புற கவிழ்ந்த கார் ஒன்றை 10க்கும் மேற்பட்ட கடைவாசிகள் சேர்ந்து திருப்பிய வீடியோ ஒன்று கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதையடுத்து மும்பை வாசிகளின் பலம் இதுதான் என்பது போன்ற கேப்ஷனுடன் தற்போது இந்த வீடியோ பேச்சப்பட்டு வருகிறது.

தெற்கு மும்பையின் கால்கேஷவர் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று ஃபோர்டு ஈகோஸ்போர்டு வகை கார் ஒன்று தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இந்தக் கார் எப்படி கவிழ்ந்தது?, அதன் உரிமையாளர் யார்? என்பது போன்ற எந்த விவரமும் தெரியாத நிலையில் பக்கத்தில் உள்ள கடையைச் சேர்ந்த சில பேர் அந்தக் காரை அழகாக திருப்பி உள்ளனர். இதற்கு அங்கு இருந்த காவல் துறையினரும் உதவிச் செய்துள்ளனர்.

இதனால் தலைகீழாக கிடந்த கார் சில நொடிகளில் திருப்பப்பட்டது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த நெட்டிசன்கள் கொரோனா நேரத்திலும் மும்பை வாசிகள் உற்சாகத்தோடும் மனித நேயத்தோடும் நடந்து கொள்கின்றனர். இதுதான் மும்பை வாசிகளின் பெரிய பலம் என்பது போன்ற கமெண்டுகளைப் பதிவிட்டு வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz