close
Choose your channels
NMM
NMM

குக் வித் கோமாளி: இன்றைய நிகழ்ச்சியில் பவித்ராவுடன் வந்த இளைஞர் யார்?

Saturday, April 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் இன்றும் நாளையும் செலிபிரிட்டி வாரம் என்பது தெரிந்ததே. இந்த வார நிகழ்ச்சியில் குக்-களுடன் அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். ஷகிலா தன்னுடைய மகள் மிலாவையும், கனி தன்னுடைய தங்கை நிரஞ்சனாவையும், தீபா தன்னுடைய உறவினரையும், பவித்ரா தன்னுடைய நண்பரையும், தர்ஷா தன்னுடைய அம்மாவையும், மதுரை முத்து தன்னுடைய நண்பர் ஆதவனையும், அஸ்வின் தன்னுடைய நண்பர் சாண்டி மாஸ்டரையும், ரித்திகா தனது அம்மாவையும் அழைத்து வந்துள்ளார்கள்

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஒருவரான பவித்ரா தன்னுடன் வந்த இளைஞர் யார்? என்பது குறித்து தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்னுடைய குடும்பத்தினர் சென்னைக்கு எதிர்பாராதவிதமாக வந்து கலந்துகொள்ள முடியவில்லை என்றும், இதனை அடுத்து எனக்கு தெரிந்த நண்பர்களில் சமைக்கத் தெரிந்த ஒரே ஒருவர் இவர்தான், இவர் பெயர் சுதர்சன் கோவிந்த் என்றும், இவர் எனக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எனக்கு உறுதுணையாக வந்து உதவி செய்ததற்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சமையலில் அவர் அகில உலக சூப்பர் ஸ்டார் என்றும், அவர் எனது உண்மையான நண்பர்களில் ஒருவர் என்று கூறியுள்ளார். இதனையடுத்து பவித்ராவின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்கள் தங்களுடைய அம்மாவை அழைத்து வந்திருந்த நிலையில் பவித்ரா தன்னுடைய அம்மா இந்த நேரத்தில் அருகில் இல்லை என்பதால் கண்கலங்கினார் என்பதும், அவருக்கு ஆறுதல் கூறிய ஷகிலா, தன்னுடைய இரண்டாவது மகள் பவித்ரா என்று கூறி அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.