close
Choose your channels
Viruman
Laal

பா ரஞ்சித்தின் அடுத்த படம் 3D-யில் உருவாகிறதா? செம அப்டேட்!

Wednesday, June 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம் நடிக்கும் திரைப்படம் குறித்த தகவல் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகயிருக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது.

மேலும் இந்த படத்தை 3Dடெக்னாலஜியில் உருவாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும், இந்த படத்தின் கதை உண்மைச்சம்பவத்தை கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ‘கேஜிஎப்’ திரைப்படம் போலவே இந்த படமும் தங்கச்சுரங்கம் பற்றிய கதையம்சம் கொண்டது என்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பை கேஜிஎஃப் லோகேஷனில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் தமிழ் சினிமாவில் உருவாகும் வித்தியாசமான, புதுமையான மற்றும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் ஒன்று என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் அது மட்டுமின்றி அவரது தயாரிப்பில் சில படங்கள் உருவாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.